Questions? +1 (202) 335-3939 Login
Trusted News Since 1995
A service for global professionals · Friday, March 29, 2024 · 699,670,170 Articles · 3+ Million Readers

சிறிலங்காவுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவியானது தொடரும் மனித உரிமைகளுக்கு உதவிடுமா ? - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

Roy Wignaraja TGTE Minister for Prevention of Genocide and Mass Atrocities

UN HUMAN RIGHTS COUNCIL, GENEVA, SWITZERLAND, October 4, 2022 /EINPresswire.com/ -- சிறிலங்காவுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவியானது தொடரும் மனித உரிமைகளுக்கு உதவிடுமா ? - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எச்சரிக்கை !!

https://youtu.be/NZLEGzXVC3U

சிறிலங்காவின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவியானது, ஐ.நாவின் உலகளாவிய கால ஆய்வின் உறுதிப்பாடுகள் மற்றும் மனித உரிமைச்சபைத் தீர்மானங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தவதற்கான உறுதிப்பாட்டின் அடிப்படையில் அமைய வேண்டும். இல்லாவிடில் அது இலங்கைத்தீவில் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான மீறல்களுக்கு வழங்குகின்ற நிதியுதவியாக அமைந்துவிடும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எச்சரித்துள்ளது.

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைச்சபையின் 51வது கூட்டத் தொடரின் 30வது அமர்வான உலகளாவிய கால ஆய்வில் உரையாற்றிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இனப்படுகொலை மற்றும் பாரிய அட்டூழியங்களைத் தடுத்தலுக்கான அமைச்சர் றோய் விக்னராஜா அவர்கள் இக்கருத்தினை முன்வைத்துள்ளார்.

மேலும் இலங்கைத்தீவினை சிங்கள பௌத்ததீவாக மாற்றும் பாசிச சித்தாந்தத்தின் அடிப்படையில், தமிழர்கள் மீதான பாரிய மனித உரிமைகள், தமிழர் தேசத்தின் மீதான இராணுவ ஆக்கிரமிப்புமே சிறிலங்காவின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்தது எனவும் அமைச்சர் றோய் விக்னராஜா அவர்கள் அவர்கள் இடித்துரைத்துள்ளார்.

மேலும் அவரது உரையில் தெரிவிக்கப்பட்டதாவது,

ஐ.நா மனித உரிமைச்சபையில் நாடுவாரிய உலகளாவிய கால ஆய்வின் செயன்முறையானது தொடக்கத்தில் இருந்து, இலங்கைத்தீவின் குடிமக்களுக்கு மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான உரிமைகளை மேம்படுத்துவதைக் கடைப்பிடிப்பதன் மூலம் உண்மையான மாற்றத்தைக் கொண்டுவருவதை விட செயன்முறையாக கொண்டுவர முயலுகின்றது.

ஆனால் ஐ.நாவின் தற்போதைய உலகளாவிய கால ஆய்வின் 4வது காலச் சுழற்சியில் வரை சிறிலங்கா அரசு எதனையும் நடைமுறைப்படுத்தாத நிலையில், கீழ் வருதம் பரிந்துரைகள் முக்கியமாகவுள்ளன.

1. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் உடன்படிக்கையினை ஏற்றுக் கொண்டு, சிறிலங்கா அதில் ஒப்பமிட்டு சர்வதேச சட்டநியமத்துக்கு அமையவாக அனைத்து கடமைகளுடன் முழுமையாக சீரமைத்தல். குற்றங்கள் மற்றும் பொதுக் கோட்பாடுகளின் ரோம் சட்ட வரையறையை இணைத்தல், அத்துடன் நீதிமன்றத்துடன் ஒத்துழைப்பை செயல்படுத்துவதற்கான விதிகளை ஏற்றுக்கொள்ளல்.

2. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குதல்.

3. வணிக மற்றும் பிற குடிசார் நடவடிக்கைகளில் இராணுவ ஈடுபாட்டை முடிவுக்குக் கொண்டுவர, பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளுக்கான குழுக்களின் பரிந்துரைகளை செயல்படுத்துதல் ஆகிய விடயங்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இனப்படுகொலை மற்றும் பாரிய அட்டூழியங்களைத் தடுத்தலுக்கான அமைச்சர் றோய் விக்னராஜா அவர்கள் தெரிவித்துள்ளார்.

Transnational Government of Tamil Eelam
TGTE
+ 16142023377
email us here

Powered by EIN Presswire


EIN Presswire does not exercise editorial control over third-party content provided, uploaded, published, or distributed by users of EIN Presswire. We are a distributor, not a publisher, of 3rd party content. Such content may contain the views, opinions, statements, offers, and other material of the respective users, suppliers, participants, or authors.

Submit your press release